வழிப்பறி: 3 வாலிபர்கள் கைது

ஸ்ரீ பெரும்புதூர்: ஒரகடம் சிப்காட் பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு, ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு குடியிருந்து வேலை செய்து வருகின்றனர். இரவு பணி முடித்துவிட்டு, சாலையில் நடந்து செல்லும் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து, கத்தி முனையில் மிரட்டி மர்ம கும்பல் ஒன்று தொடர்ந்து செல்போன்கள், பணம் போன்றவற்றை கொள்ளையடித்து செல்வதாக ஒரகடம் காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க திட்டமிட்ட போலீசார், ஒரகடம் பகுதியில் தீவிரமாக கண்காணித்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பைக்கில் சந்தேகப்படும்படி வந்த நபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (19), காஞ்சிபுரம் படப்பை பகுதியை சேர்ந்த யுவனேஷ் குமார் (20), ரிஷாத் குமார் (24) ஆகிய 3 பேரும், ஒரகடத்தில் சாலையில் செல்பவர்களிடம் கத்தி முனையில் மிரட்டி தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு