கியா செல்டாஸ்

கியா நிறுவனம் செல்டாஸ் எஸ்யுவியின் டீசல் 6 எம்டி காரை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த 6 கியர் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலை உற்பத்தி செய்துள்ளதாக நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எச்டிஇ, எச்டிகே, எச்டிகே பிளஸ், எச்டிஎக்ஸ் மற்றும் எச்டிஎக்ஸ் பிளஸ் ஆகிய வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக எச்டிசி சுமார் ரூ.11,99,900 எனவும், டாப் வேரியண்டான எச்டிஎக்ஸ் ரூ.18,27,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. பிஎஸ்6 – 2 விதிகளை பூர்த்தி செய்துள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 114.41 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். கியா நிறுவனத்தின் செல்டாஸ் கார் முதன் முதலாக 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை சுமார் 6 லட்சம் செல்டாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

Related posts

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

கோவளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி: 360 மாணவிகள் பங்கேற்பு