கியா இவி3

கியா நிறுவனம் ஏற்கெனவே, இவி9, இவி6 மற்றும் இவி5 ஆகிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இவி3 என்ற புதிய எலக்ட்ரிக் எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. 58.3 கிலோவாட் அவர் மற்றும் 81.4 கிலோ வாட் அவர் என்ற இரண்டு வித பேட்டரி பேக்கேஜ்களில் கிடைக்கிறது. டாப் வேரியண்ட் முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 600 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். அதிவேக சார்ஜர் மூலம் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை 31 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். பேட்டரி கொண்ட வேரியண்ட்டை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கி.மீ தூரம் வரை செல்லும். இந்த காரில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 201 எச்பி பவரையும், 283 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். கியா எலக்ட்ரிக் கார்களில் இதில் முதல் முறையாக ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 12 அங்குல ஹெட்ஸ்அப் டிஸ்பிளே, ஆம்பியன்ட் லைட்டிங், டிஜிட்டல் டிஸ்பிளே, ஹார்மன் கர்டன் சவுண்ட் சிஸ்டம், ஆடாஸ் தொழில்நுட்பம் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. கொரியாவில் அடுத்த மாதம் சந்தைப்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவில்லை.

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்