தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் ஸ்டீஃபன் ராஜை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது!

திருவனந்தபுரம்: புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் ஸ்டீஃபன் ராஜை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளார். குருவாயூரப்பன் அம்பல நடையில் படத்தை பதிவேற்றம் செய்தது தொடர்பாக தயாரிப்பாளர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த இவர் ஒரு படத்திற்கு ரூ.5000 கமிஷன் பெற்று பதிவேற்றம் செய்துள்ளார். புதிய படங்களின் முதல் நாள் காட்சியிலேயே இருக்கையில் சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். தனுஷ் தனது 50-வது திரைப்படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றன.

தணிக்கைக்குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ள ராயன் படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களில் ஹவுஸ் புல்லாக ஒடியது. தனுஷின் முந்தைய படங்களான கேப்டன் மில்லர், கர்ணன், வாத்தி ஆகிய திரைப்படங்களை ஒப்பிடும் பொழுது ராயன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், திருவனந்தபுரம் தியேட்டரில், நடிகர் தனுஷின் ராயன் படத்தை செல்போனில் பதிவு செய்த மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரள சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஸ்டீபன் ராஜ் புதுப்படங்களை செல்போனில் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றும் கும்பலை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது