கேரளாவில் 4 நாட்கள் பலத்த மழை பெய்யும்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 8ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடங்கிய வேகத்தில் ஒரு சில நாட்கள் மழை பெய்த போதிலும் பின்னர் பலவீனம் அடைந்தது. கடந்த சில தினங்களாக கேரளாவில் எந்த இடத்திலும் குறிப்பிடும்படி மழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று முதல் பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளாவில் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று ஒன்றிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று இடுக்கி மாவட்டத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்த மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

புளியந்தோப்பு சரகத்தில் ஒரேநாளில் 13 ரவுடிகள் கைது

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலாத்காரம்: 5 பேர் கைது

துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பு ஏற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்