நாட்டில் முதல்முறையாக கேரள மாநிலம் கொச்சியில் இன்று முதல் வாட்டர் மெட்ரோ சேவை தொடங்குகிறது!

திருவனந்தபுரம்: கேரளாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நாட்டிலேயே முதல் முறையாக 30 தீவுகளை இணைக்கும் வகையில் கொச்சியில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை,டெல்லி, பெங்களூரு,கொச்சி உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல், இந்தியாவிலேயே முதன் முதலாக கொச்சியில் வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்கப்படுகிறது.

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த திட்டத்தில், முதல் கட்டமாக 8 வழித்தடங்களில் 15 அதி நவீன படகுகள் இயக்கப்படுகின்றன. மின்சாரத்தில் இயங்கும் இந்த படகுகள் முழுக்க குளிரூட்டப்பட்ட வசதிகள் கொண்டதாக இருக்கும். இதன் குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொச்சி மெட்ரோ ரயிலுக்கு பயன்படுத்தும் மின்னணு கார்டை இதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். கொச்சி நகரை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இந்த தீவுகள் அனைத்தையும் இணைக்கும் வகையில் இந்த வாட்டர் மெட்ரோ நடத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக ரூ.1,336 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கேரள பயணத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. கொச்சியில் மட்டும் 2000த்திற்கும் அதிகமான போலீசாரும், திருவனந்தபுரத்தில் 3000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு