கேரளாவிற்கு ரூ.1.90 கோடி கடத்தல்: 2 பேர் சிக்கினர்

பாலக்காடு: கோவையில் இருந்து கேரளாவிற்கு காரில் ரூ.1.90 கோடியை கடத்திய 2 பேரை கைது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு பணம் கடத்தப்படுவதாக பாலக்காடு மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே குருடிக்காடு பகுதியில் புதுசேரி கசபா போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து வாளையார் வழியாக பாலக்காடு நோக்கி சொகுசு கார் ஒன்று வந்தது. அதனை போலீசார் மறித்தனர்.

அப்போது காரை நிறுத்துவது போல் நடித்து, பின்னர் அதிவேகமாக ஓட்டிசென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் காரில் இருந்த 1 கோடியே 90 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் காரில் இருந்த 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த முகமதுகுட்டி (41), மலப்புரம் மாவட்டம் புத்தனங்காடியைச் சேர்ந்த முகமது நிஷார் (36) என தெரியவந்தது. இவர்கள் கோவையில் இருந்து மலப்புழா மாவட்டத்திற்கு பணத்தை கடத்தி சென்றது உறுதியானது. மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்