மோசடி ஆசாமியுடன் தொடர்பு கேரள ஐஜி அதிரடி சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் மோசடி ஆசாமியுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஐஜி லக்‌ஷ்மணா பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரள மாநிலம் கொச்சியில் மோன்சன் என்பவர் பழங்கால புராதனப் பொருட்கள் விற்பனை செய்யும் மையம் நடத்தி வந்தார். ஆனால் அங்கு விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் போலியானது என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மோன்சன் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.

மேலும் மோன்சனுக்கு அரசியல்வாதிகள், போலீஸ் உயரதிகாரிகள், நடிகர்கள் உள்பட பலருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக ஐஜி லக்‌ஷ்மணா, முன்னாள் டிஐஜி சுரேந்திரன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதாகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ஐஜி லக்‌ஷ்மணாவை கடந்த சில தினங்களுக்கு முன் குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தனர். பின்னர் இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் ஐஜி லக்‌ஷ்மணாவை சஸ்பெண்ட் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு