பெண் நிருபரிடம் அத்துமீறல் சுரேஷ் கோபிக்கு கேரள ஐகோர்ட் முன்ஜாமீன்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரும், பாஜ முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான சுரேஷ் கோபி கடந்த அக்டோபர் 27ம் தேதி கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேள்வி கேட்ட ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சி பெண் நிருபரின் தோளில் அவர் கை வைத்து பேசினார். இது குறித்து அந்தப் பெண் நிருபர் கோழிக்கோடு நடக்காவு போலீசில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து முன் ஜாமீன் கோரி சுரேஷ் கோபி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று இந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது சுரேஷ் கோபியை கைது செய்யும் திட்டம் இல்லை என்று கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!