கேரளாவில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்: இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 19ம் தேதிவரை 4 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்கிறது. இந்தநிலையில் வட கேரளா முதல் குஜராத் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. ஆகவே வரும் 19ம் தேதி வரை 4 நாட்களுக்கு கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

நேற்று கனமழை பெய்ததால் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர், மலப்புரம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. காசர்கோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று 7 மாவட்டங்களுக்கும் நாளை (17ம் தேதி) 9 மாவட்டங்களுக்கும் 18ம் தேதி 6 மாவட்டங்களுக்கும் 19ம் தேதி 4 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு