மாநில நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து கேரள அரசு வழக்கு!!

டெல்லி : மாநில நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மாநில அரசு வாங்கக் கூடிய நிகரக்கடனுக்கு ஒன்றிய அரசு உச்சவரம்பை நிர்ணயிப்பதற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வெளிச்சந்தையில் மாநில அரசு கடன் வாங்கவும் ஒன்றிய அரசு தடுப்பதாக மனுவில் கேரள அரசு குற்றம் சாட்டியுள்ளது. அரசுக் கடன் என்ற வரம்புக்குள் வராத இனங்களையும் கடன்கள் என ஒன்றிய அரசு கணக்கிட்டு வரம்பு விதிப்பதாக புகார் கூறப்படுகிறது.

Related posts

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே