கேரள முதல்வர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அண்மையில் அளித்த பேட்டியில் மலப்புரம் மாவட்டத்தினர் குறித்து இழிவாக பேசியதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக பினராயி விஜயன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்தினரை இழிவாக பேசிய முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி நேற்று திருவனந்தபுரத்தில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இளைஞர் அமைப்பினர் சட்டப்பேரவையை நோக்கி கண்டனப் பேரணி நடத்தினர். சட்டப்பேரவை அருகே தடுப்பு அரண்களை அமைத்து பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலைக்க முயன்றனர். அப்போது கற்களை வீசி தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டினர்.

Related posts

பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்: டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்

மோதலில் மாநிலக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு