கேரள மாநிலம் திருச்சூரில் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை புலி: மூங்கில் மரக்கம்பு உதவியுடன் மீட்ட வனத்துறை

கேரளா: கேரள மாநிலம் திருச்சூரில் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை புலியை மூங்கில் மரக்கம்பு உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். திருச்சூர் அதிர்ப்பள்ளியில் சிபு என்பவரின் விவசாய கிணற்றில் வனப்பகுதியிலிருந்து தவறி விழுந்த 2 வயதுடைய சிறுத்தை புலி கிணற்றில் விழுந்தது. அங்கும் இங்குமாக உறுமிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த சிறுத்தை புலியை கண்ட உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து சாலக்குடியிலிருந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை புளியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வழக்கமாக மயக்க ஊசி செலுத்தி வளைக்கட்டி மீட்பது வழக்கம் ஆனால் இம்முறை மூங்கில் மரக்கம்புகளை ஏணி போல இறக்கி வைத்து காத்திருந்தனர். சிறிது நேரத்தில் அந்த மூங்கில் வழியாக சிறுத்தை புலி மேலேறி வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு