கேரள மாநிலம் இடுக்கியில் நெடுஞ்சாலை பணியின்போது மண் சரிந்து விபத்து: காயங்களுடன் மீட்கப்பட்ட இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை

கொச்சி: கேரள மாநிலம் இடுக்கியில் தேசிய நெடுஞ்சாலை பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த கட்டுமான தொழிலாளர் மண்ணுக்குள் புதைந்தார். இடுக்கி அடிமாலி பகுதியில் தேசிய நெடுஞ்சசாலையில் நீர் வழி பாதைக்காக ஓடைகள் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் இரண்டு தொழிலாளர்கள் அப்பணியில் ஈடுபட்டிருந்தனர். தென்காசியை சேர்ந்த காளிசாமி, திருவனந்தபுரம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜோஸ் என்பவர்கல் அப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அச்சமயத்தில் அருகில் இருந்த மண் சரிந்து இருவர் மீதும் விழுந்தது. இதில் காளிசாமி முற்றிலும் மண்ணில் புதைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அடிமாலி தீயணைப்பு துறையினர் இரு தொழிலாளர்களையும் சிறு காயங்களுடன் மீட்டு அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இத்தகைய தொழிலாளர்கள் மண்ணில் புதைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது