கேரளாவில் துப்பாக்கியை ஏந்தியபடி மாவோயிஸ்ட்கள் பேரணி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது கீழ்ப்பள்ளி. இது ஒரு மலையோர கிராமமாகும். நேற்று முன்தினம் மாலை இங்குள்ள அய்யன்குன்னு பகுதியில் திடீரென மாவோயிஸ்டுகள் வந்தனர். 11 பேர் அடங்கிய அந்தக் குழுவில் 3 பெண்களும் இருந்தனர். இவர்கள் துப்பாக்கிகளுடன் திடீரென்று அப்பகுதியில் பேரணி நடத்தினர். அப்போது அவர்கள் கேரள மற்றும் ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இந்த பேரணி நடைபெற்றது. இதையடுத்து மாவோயிஸ்டுகள் அனைவரும் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதேபோல் கடந்த மாதம் 24ம் தேதி கண்ணூர் அருகே அய்யன்குன்னு பகுதியில் 5 மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் பேரணி சென்றனர். இது பரபரப்்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை