கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: 2020ல் கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ED தரப்பில் ஆஜராக வேண்டிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக இயலாத நிலையில் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட கேரள அரசு தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல், வழக்கை எத்தனை முறை ஒத்திவைக்க கோருவீர்கள் என கேள்வி எழுப்பினார். தங்க கடத்தல் வழக்கை ED தீவிரமானதாக கருதவில்லை என்றே தோன்றுகிறது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

 

Related posts

சத்தியம் தவறாத உத்தமரா ராமதாஸ் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்டமான வான் சாகச ஒத்திகை

ஆந்திராவில் இருந்து பைக்கில் போடி பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்