கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்

திருவனந்தபுரம்: கேரள சட்டம், ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் ஷேக் தர்வேஷ் சாகிப். கடந்த வருடம் இவர் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவரது மனைவி ஷேக் பரிதா பாத்திமாவின் பெயரில் திருவனந்தபுரத்திலுள்ள நெட்டயம் என்ற பகுதியில் 10.8 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ₹74 லட்சத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்து திருவனந்தபுரத்தை சேர்ந்த உமர் ஷெரீப் என்பவருடன் கடந்த வருடம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது முன்பணமாக ₹30 லட்சத்தை உமர் ஷெரீப், டிஜிபியிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த நிலம் ஒரு வங்கியில் ₹26 லட்சத்திற்கு அடமானம் வைக்கப்பட்ட விவரம் உமர் ஷெரீப்புக்கு தெரியவந்தது. இதனால் பணத்தை திரும்பிக் கேட்டபோது, தராதால் உமர் ஷெரீப் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், டிஜிபியின் மனைவியின் 10.8 சென்ட் நிலத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு வரும் 6ம் தேதி விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் உமர் ஷெரீப் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், டிஜிபியுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். ₹30 லட்சம் பணத்தை டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப் திருப்பிக் கொடுத்ததால் தான் இந்த வழக்கை உமர் ஷெரீப் வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!