கேரளத்துக்கு கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்ல வேண்டாம்: உயர்கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை: கேரளத்துக்கு கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கேரளாவில் நிஃபா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் அம்மாநிலத்துக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கோவை மண்டல கல்லூரி கல்வி இயக்குநர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
கேரளா மாநிலத்தில் நிஃபா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கோவை மண்டலத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் தங்கள் மாணவ, மாணவியர்களை கேரளாவிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு தெரிவித்துக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு