கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 3 நாட்களில் ரூ.150 கோடிக்கு மது விற்பனை

கேரளா: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 3 நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் மது விற்பனையாகியுள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறிஸ்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். இந்நிலையில் கேரளாவில் கிறிஸ்துமசுக்கு முந்தைய 3 தினங்களில் (டிச. 22,23,24) மதுபான சில்லறை கடைகள் மூலம் 154.78 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. 24ம் தேதி மட்டும் ரூ70.74 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கேரள மதுபான கழகம் (பெவ்கோ) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 144.91 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது எனவும் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.