கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு

திருவனந்தபுரம்: கேரளா களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். கேரள மாநிலம் கொச்சி நகரின் மையப்பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை மாநாடு நடந்த அரங்கத்தில் இன்று காலை பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஒருவர் பலியான நிலையில், 35 பேர் படுகாயமடைந்தனர். 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இது குறித்து அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கொச்சி களமசேரியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த குண்டு வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உள்பட மத்திய உளவுத்துறையினரும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். மாநிலத்தில் அமைதியை பாதுகாப்பது தொடர்பாக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றிருந்த முதல்வர் பினராயி விஜயன் கேரளா புறப்பட்டார்.

Related posts

காந்திக்கு பதில் இந்தி நடிகர் படம் போட்ட கள்ள நோட்டுகள் குஜராத் நகை கடை அதிபரிடம் 2.1 கிலோ தங்கம் மோசடி

மொபட் மீது தனியார் பேருந்து மோதியதில் சட்ட கல்லூரி மாணவி தலை நசுங்கி பரிதாப பலி: திருக்கழுக்குன்றத்தில் சோகம்

கீழ் மருவத்தூர் – வெங்கடேசபுரம் இடையே குண்டும் குழியுமான தார் சாலை: வாகன ஓட்டிகள் அச்சம்