கேரளாவில் பிரபல நடிகர் உள்பட 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

திருவனந்தபுரம்: கேரளாவில் கணேஷ் குமார், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் ஆகிய 2 பேரும் அமைச்சர்களாக இன்று பதவி ஏற்கின்றனர்.கேரளாவில் இடதுசாரி கூட்டணியில் ஜனநாயக கேரளா காங்கிரஸ், இந்திய தேசிய லீக், கேரளா காங்கிரஸ் (பி), காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளும் உள்ளன. இந்த கட்சிகளுக்கு தலா ஒரு எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது என்பதால் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு 2 பேருக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்ற 2 பேருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி முதல் இரண்டரை ஆண்டுகள் ஜனநாயக கேரளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆண்டனி ராஜுவும், இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த அகமது தேவர் கோவிலும் அமைச்சர்களாக இருந்தனர். இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டதால் சமீபத்தில் 2 பேரும் பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து கேரளா காங்கிரஸ் (பி) கட்சியை சேர்ந்த கணேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் (எஸ்) கட்சியை சேர்ந்த கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று 2 பேரும் பதவி ஏற்க உள்ளனர்.

ஆண்டனி ராஜு வைத்திருந்த போக்குவரத்துத் துறை கணேஷ் குமாருக்கும், அகம்மது தேவர் கோவில் வசம் இருந்த துறைமுகத்துறை கடன்னப்பள்ளி ராமச்சந்திரனுக்கும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து திருவனந்தபுரம் கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2 பேருக்கும் கவர்னர் ஆரிப் முகம்மது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அமைச்சராக பதவியேற்கும் கணேஷ் குமார் பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு