கல்லூரி மாணவர்களுக்கு போதை சப்ளை கென்யா பெண் உட்பட 3 பேர் கைது

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து உயர் ரக போதை மருந்து சப்ளை செய்த கென்யா பெண் கைது செய்யப்பட்டார். கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து செயல்பட்ட போதைப் பொருள் சப்ளை கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன்குமார், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் ஆகியோர் கர்நாடக மாநிலத்தில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து சப்ளை செய்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் போதை மருந்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது கென்யா நாட்டை சேர்ந்த இவி பொனுகே(26) என்ற பெண் என்றும் அவர் பெங்களூரில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கோவை தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று கென்யா பெண்ணை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின் ஏற்கனவே கைதான 2 பேர் உள்பட 3 பேரையும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு