கென்யாவில் உணவுப் பொருட்கள் மீதான வரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எதிர்க்கட்சியினர், போலீசார் இடையே பயங்கர மோதல்

கென்யா: கென்யாவில் உணவுப் பொருட்கள் மீது அரசு விதித்துள்ள வரியை கண்டித்து எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. நைரோபியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ரைலாஓடிங்கா அழைப்பு விடுத்திருந்தார். இதில் பேசிய அவர் கென்ய அதிபர் வில்லியம் ரோடோ அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டினார்.

அப்போது எதிர்க்கட்சியினர் மற்றும் போலீசாரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தினரை விரட்டி அடித்ததால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. தொடர்ந்து பேசிய ஓடிங்கா கென்ய அரசு எதிர்கட்சியினரை திட்டமிட்டு வேட்டையாடுவதாகவும் தேர்தல் ஆணையத்தை மறு சீரமைக்காமல் ஒருதலை பட்சமாக நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

Related posts

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு

மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

அணுக் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்