கெஜ்ரிவால் கோரிக்கை தன்கர் மறுப்பு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை தலைவராக சஞ்சய் சிங் இருந்து வந்தார். இவர் தற்போது டெல்லி மதுபான முறைகேட்டில் சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், ராகவ் சதாவை மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்க கோரி அவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 14ம் தேதி கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களைவை தலைவராக ராகவ் சதாவை நியமிக்க அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறுத்துள்ளார். இடைக்கால தலைவரை நியமிக்க சட்டத்தில் இடமில்லை என்று தன்கர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி

தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்