கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க முடியாது: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஜூன்1ம் தேதி வரையில் இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த 10ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் படி கடந்த 1ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை அமைப்பின் மூலம் திகார் சிறையில் சரணடைந்தார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவனீவ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா வழங்கிய தீர்ப்பில், டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் விசாரணை என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் சில குற்றவாளிகள் புதியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் என்பதால் நாங்கள் அதனை நீட்டிக்க முடியாது. உடல் பரிசோதனைக்காக இடைக்கால ஜாமீனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்கிறோம். இருப்பினும் அவரது மருத்துவ சிகிச்சை குறித்து ஒரு சில வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியுள்ளது என உத்தரவிட்ட நீதிபதி, அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூன் 19ம் தேதி வரையில் நீட்டிப்பதாக தெரிவித்தார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி