கெஜ்ரிவால் முதல்வராகும் வரையில் பரதன் போன்று ஆட்சி செய்வேன்: டெல்லி முதல்வர் அடிசி சபதம்

 

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக அடிசி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் கடந்த 21ம் தேதி தலைநகர் டெல்லியில் 8வது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதேபோன்று அவரது அமைச்சரவையில் புதியதாக ஐந்து அமைச்சர்களும் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக அடிசி நேற்று காலை டெல்லி தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த போது அவர் அமர்ந்திருந்த இருக்கையில் உட்காராமல் வழக்கமாக அமைச்சர்கள் அமரும் வேறு ஒரு இருக்கையில் அமர்ந்தார்.

இருப்பினும் அதேநேரத்தில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இருக்கையினையும் தனது இருக்கைக்கு அருகிலே வைத்து கொண்டார். தொடர்ந்து அடிசி கூறியதில், இராமாயணத்தில் ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற போது அவரது காலணியை வைத்து பரதன் ஆட்சி செய்தார். அதேபோன்று அடுத்த நான்கு மாதங்கள் நானும் டெல்லி ஆட்சியை நடத்த உள்ளேன். டெல்லி முதலமைச்சர் பதவி என்பது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமானதாகும். அவர் மீண்டும் முதல்வர் பொறுப்புக்கு திரும்பும் வரையில் காத்திருப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

பிரபல ரவுடி சி.டி. மணிக்கு கால் எலும்பு முறிவு; மருத்துவமனையில் அனுமதி!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு!

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் கைது!