கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு விவகாரத்தில் இடைக்கால ஜாமீன் கோரியும், அதேப்போன்று அமலாக்கத்துறை கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு அப்போது ஜூன் 1ம் தேதி வரையில் இடைக்கால ஜாமீன் வழங்கியதோடு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி