கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக ஈடி சம்மன்

புதுடெல்லி: டெல்லியில் புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கில் நாளை மறுநாள் (17ம்தேதி) முதல்வர் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே அமலாக்கத்துறை சார்பில் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வருகின்ற 19ம்தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை : பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்