கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட ெடல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக கடந்த 1ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர், உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால் ஜாமீன் நிறைவடைந்தைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி கெஜ்ரிவால் மீண்டும் கடந்த 2ம் தேதி திகார் சிறைக்குச் சென்றார்.

இந்த நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை மற்றும் சிகிச்சையைத் தீர்மானிக்க அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவின் நடவடிக்கைகளைக் காணொலி மூலம் தனது மனைவியை அனுமதிக்குமாறு கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்ற விசாரித்தது. இன்று விசாரணைக்கு வந்த அந்த மனுவை நீதிபதி நாளைக்கு (ஜூன் 15) ஒத்திவைத்தார். மேலும் இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 19ம் தேதிக்கு ெடல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related posts

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறார் அமைச்சர் பொன்முடி

சுருளி அருவி அருகே யானை நடமாட்டம்: குளிக்க தடை

பாரா ஒலிம்பிக்குக்கு தேர்வாகியுள்ள 5 பேருக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்