முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது: டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது

டெல்லி: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது.

அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கையை தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது. மேலும், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்திய நிதியமைச்சர் அதிஷி, சுகாதாரத்துறை அமைச்சர் பரத்வாஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு