உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்து!!

கேதார்நாத்: உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துகுள்ளானது. உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் பகுதியில் கடந்த மே மாதம் 24ம் தேதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனியார் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரை பழுதுநீக்க மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் ராட்சத ரோப் கொண்டு எடுத்துச் செல்லப்பட்டபோது மந்தாகினி ஆற்றில் விழுந்து நொறுங்கியுள்ளதாகவும், சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கேதார்நாத் மாவட்ட சுற்றுலா அதிகாரி கூறியதாவது; ‘எம்ஐ-17 விமானம் மூலம் ஹெலிகாப்டரை கௌச்சர் விமான ஓடுதளத்துக்கு இன்று கொண்டு செல்ல திட்டமிட்டு, சிறிது தூரம் சென்றவுடன் எம்ஐ-17 பேலன்ஸ் இழக்கத் தொடங்கியது. ஹெலிகாப்டரின் எடை மற்றும் காற்றின் காரணமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கு காயமில்லை. எனவே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்’ என அவர் கூறினார்.

Related posts

பெண்களுக்கு மாதம் ரூ.2,000 .. முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,000 : காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி!!

‘’இதுபோன்ற பெண்கள் இருக்கும் வரை மரணம் நடக்கும்’’ கடிதம் எழுதிவைத்துவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

23 வயது காதலியை மணந்த 18 வயது கால்பந்து வீரர்