இஸ்ரேல் அரசு போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் ஜூன் 2ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீன பகுதியான காசாவில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம்தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை அட்டூழியத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 36,000 பேருக்கு மேல் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்தும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே, இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்தும், ரபாவின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், சுயேட்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 2ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது