காவாசாக்கி நிஞ்சா 500

காவாசாக்கி நிறுவனம், நிஞ்சா 500 மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 451 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 45 எச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 42.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. காவாசாக்கி எலிமினேட்டர் 500 குரூசர் மோட்டார் சைக்கிளில் உள்ள அதே இன்ஜின்தான் இதிலும் இடம் பெற்றுள்ளது. முன்புறம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனா ஷாக் அப்சர்வர்கள், 17 அங்குல வீல், டூயல் சானல் ஏபிஎஸ், ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி கொண்ட முழுமையான எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், எல்இடி லைட்டுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அறிமுகச் சலுகையுடன் ஷோரூம் விலையாக சுமார் ₹5.24 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள நிஞ்சா 400 பைக்கும் இதே விலைதான். எனவே, இதற்கு மாற்றாக புதிய பைக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு