காவாசாக்கி நிஞ்சா 300

காவாசாக்கி நிறுவனம், நிஞ்சா 300 என்ற புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளில், 296 சிசி பேரலல் டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 11,000 ஆர்பிஎம்-ல் 38.4 பிஎச்பி பவரையும், 11,000 ஆர்பிஎம்-ல் 26.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், சிலிப்பர் கிளட்ச் இடம், முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள், டூயல் சானல் ஏபிஎஸ் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.3.43 லட்சம். கேடிஎம் ஆர்சி 390, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் யமஹா ஆர்3 ஆகியவற்றுக்கு இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்