கவியருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில வாரமாக தொடர்ந்து பெய்த கன மழையால், கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுமார் 3 வாரத்துக்கு முன்பு, சுற்றுலா பயணிகளுக்கான தடையை நீக்கி மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, கவியருவிக்கு தினமும் சுற்றுலா வருகை அதிகமானது.

ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த பருவமழையால் கடந்த 14ம் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆழியார் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்கிறது. இதனால் நீரோடைகளில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால், கவியருவியில் சுமார் 2 வாரமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. ஆழியார் சோதனைச்சாவடியிலிருந்து, கவியருவிக்கு வந்த சுற்றுலா வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. தற்போதும் கவியருவியில் காட்டாற்று வெள்ளம்போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து, தடையை மீறி யாரேனும் வனத்திற்குள் செல்கிறார்களா என வனச்சரகர் ஞானமுருகன் தலைமையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்