காவேரி மருத்துவமனை சாதனை 4 வயது சிறுமியின் கல்லீரலில் 15 செ.மீ புற்றுக்கட்டி அகற்றம்

சென்னை : சிறுமியின் உடலில் இருந்த 15 செ.மீ. நீள கல்லீரல் புற்றுக்கட்டியை அகற்றி காவேரி மருத்துவமனை சாதனை செய்துள்ளது. காய்ச்சல் மற்றும் வயிற்றுவலி காரணமாக 4வயது சிறுமி வடபழனி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் சிறுமியின் இடதுபுற கல்லீரலில் 15 செ.மீ. நீள புற்றுக்கட்டி இருப்பது தெரியவந்தது. லேப்ராஸ்கோப் முறையில் கல்லீரலில் இருந்து புற்றுக்கட்டியை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர். அதைத் தொடர்ந்து, கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக காவேரி மருத்துவமனை மருத்துவர் சுவாமிநாதன் கூறுகையில், அனைத்து புற்றுநோய்களிலும் 14 வயது வரையிலான குழந்தைப்பருவ புற்றுநோய்களின் பங்கு 4% ஆகும். குழந்தைப்பருவ கல்லீரல் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் அறுவைசிகிச்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் புற்றுக்கட்டி முற்றிலுமாக அகற்றப்படும் மற்றும் அதன்பிறகு கீமோதெரபி சிகிச்சை வழங்கப்படும். சிக்கல்களும், தொற்றுகளும் வராமல் தடுப்பதில் அறுவைசிகிச்சை நிபுணர், மயக்கவியல் துறை நிபுணர்களின் நிபுணத்துவம் இன்றியமையாதது. இச்சிறுமிக்கு செய்யப்பட்ட அறுவைசிகிச்சை யின் வெற்றி, எமது மருத்துவ குழுவினரின் ஒத்துழைப்பான முயற்சிக்கும் மற்றும் சிறுமியின் மனோதிடத்திற்கும் ஒரு நேர்த்தியான சான்றாகும் என்றார்.

 

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி