காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை: காவேரி மருத்துவமனை மற்றும் டிசிஎஸ் நிறுவனம் இணைந்து புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தின. இதில் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தியாவில் 1.3 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்புகள் உள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், வாய்ப்பகுதியில் புற்றுநோய் ஆகியவை அதிகம் கண்டறியப்படும் புற்றுநோய் வகைகளாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 8,50,000 பேர் புற்றுநோயின் காரணமாக உயிரிழக்கின்றனர். இந்த அளவிற்கு அதிகமாக உயிரிழப்புகள் இருக்கின்ற போதிலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுமானால், புற்றுநோயானது, சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்தக் கூடியதாகவும், குணப்படுத்தக் கூடியதாகவுமே இருக்கிறது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனை மற்றும் டிசிஎஸ் நிறுவனம் இணைந்து புற்றுநோய்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டியை நேற்று நடத்தியது. இதில் கலந்துகொண்டவர்கள் புற்றுநோய் பற்றி தங்களுக்கு தாங்களே கற்பித்துக் கொள்ளவும் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உதவ முடிந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். உலகளவில் அதிகரித்து வரும் பொது நோயாக புற்றுநோய் உள்ளது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அதற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். இத்தகைய முன்னெடுப்புகள் மற்றும் பரிசோதனை செயல்திட்டங்கள் வழியாக புற்றுநோய்க்கான அடையாளங்கள் அல்லது அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த ஆரம்ப நிலையிலேயே பாதிப்பு கண்டறியப்படுவது மிக முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்