காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் தீவிரவாதிகளுக்கு எதிராக முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு மோடி உத்தரவு

புதுடெல்லி:ஜம்மு காஷ்மீரின் ரீஸி மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி புனித யாத்திரை சென்ற பக்தர்கள் பயணித்த பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில்,9 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.மேலும், 41 பேர் படுகாயமடைந்தனர். கடந்த 11ம் தேதி கதுவா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த பயங்கர மோதலில் 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலின் போது படுகாயமடைந்த ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படை வீரர் வீர மரணம் அடைந்தார்.

என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டன.ரீஸி, கதுவா,தோடா மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்களால் அந்த பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது. ரீஸி, கதுவா, தோடா மாவட்டங்களில் நடந்த தாக்குதல்களில் தொடர்புடைய 5 தீவிரவாதிகளின் படங்களை வெளியிட்ட போலீசார் அவர்களை பற்றிய விவரங்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

தொடர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிக்க காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளை பற்றிய எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையே, காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதையடுத்து, அங்கு உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து பிரதமர் மோடி நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அப்போது தீவிரவாதிகளை பிடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், காஷ்மீரின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள உத்திகள் குறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கினர். வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்க பயங்கரவாத எதிர்ப்பு திறன்களின் முழு அளவையும் பயன்படுத்த வேண்டும். அனைத்து அச்சுறுத்தல்களுக்கும்.,வலுவான, ஒருங்கிணைந்த பதிலடி கொடுப்பது அவசியம். தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அனைத்து ஆதாரங்களையும், உத்திகளையும் பயன்படுத்த வேண்டும் அதிகாரிகளை மோடி கேட்டு கொண்டார். ஆய்வு கூட்டத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்கா ஆகியோருடனும் மோடி தொலைபேசியில் பேசினார் என்று தெரிவித்தன.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்