கரூர் தொகுதி எம்.பி.யானார் ஜோதிமணி.. கடும் போட்டியிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..!!

கரூர்: கரூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தியா அளவில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகுத்து வருகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 5,04,131 வாக்குகளையும், அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எல்.தங்கவேல் 3,42,415 வாக்குகளையும் பெற்றுள்ளார். 1.61 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி முன்னிலையில் உள்ளார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தில்நாதன் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது