கரூரில் குறை தீர்வுக்காக அரசு அலுவலகம் வரும் மக்களுக்கு உரிய மரியாதை: புதிய நடைமுறைக்கு பொதுமக்கள் வரவேற்பு

கரூர்: அரசு அலுவலகங்களுக்கு கோரிக்கை மனு கொண்டுவரும் மக்களுக்கு உரிய மரியாதையை அளித்து விசாரிக்கும் நடைமுறை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களை அலட்சியபடுத்தாமல் அவர்களை அமர வைத்து மரியாதையுடன் கோரிக்கையை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் முதல்வரின் ஆலோசனையை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நடைமுறைபடுத்தினார். மனு கொடுக்கவரும் மக்களை அமரவைத்து அவர்களிடம் அதிகாரிகள் கோரிக்கை மனுவை பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களை அலட்சியப்படுத்தாமல் அவர்களது குறை தீர் கோரிக்கைகளை மரியாதையுடன் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர் கூறினார். அரசின் இந்த புதிய நடைமுறைக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related posts

வறட்சியைத் தாங்கி வளரும் நெல்ரகம் காட்டுயானம்!

இந்த ஊரில் துளசிதான் முதன்மைப்பயிர்!

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி