கரூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் வீசி எறியும் பிளாஸ்டிக் கழிவுகள்

*நடவடிக்கை எடுக்க பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கரூர் : விவசாய நிலங்களின் அருகே பிளாஸ்டிக் பொருட்களை அப்படியே விட்டு விட்டு செல்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவது குறித்து கண்காணித்து சீரமைக்கப்படுமா? என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. கரூர் மாநகராட்சியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாந்தோணிமலை, ராயனு£ர், வெள்ளியணை, வெங்ககல்பட்டி, செல்லாண்டிபாளையம், பத்தாம்பட்டி, வெங்கமேடு, மில்கேட், திருமாநிலையூர், வாங்கல் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விவசாய நிலம் மற்றும் விளைநிலங்களை ஒட்டியே செயல்பட்டு வருகிறது.

இதில், பெரும்பாலான கடைகளின் அருகிலேயே பார்கள் செயல்பட்டாலும், பெரும்பாலான குடிமகன்கள், சரக்குகளை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து குடித்து விட்டு, பிளாஸ்டிக் கப், பாட்டில்கள், வாட்டர் கப், வாட்டர் கேன் போன்ற அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு செல்கின்றனர்.

இதுபோன்ற நிலங்களின் விட்டு செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணோடு மண்ணாக மக்கி, நிலத்தின் தன்மையும் பாதிக்கும் வகையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.இந்த மாதத்தின் இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதாக வானிலை அறிவித்துள்ளது. அவ்வாறு மழை பெய்யும் பட்சத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்து, வினை மாற்றம் ஏற்பட்டு, மண்ணின் தன்மையும் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற செயல்கள் முக்கிய காரணமாக உள்ளது.

குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து அப்படியே போட்டு விட்டு செல்லும் நிலையில், கால்நடைகளும் இதனால், பாதிக்கப்பட்டு, காயமடைந்து செல்லும் நிகழ்வுகள் கரூர் மாநகர புறநகர்ப்பகுதிகளில் அதிகளவு நடைபெற்று வருகிறது.பெரும்பாலான டாஸ்மாக் கடைகளும், பார்களும், நகரின் வெளிப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் நிலையில், இதன் அருகிலேயே விவசாய நிலங்களும் உள்ளதன் காரணமாக, வரும் காலங்களில் இதன் செயல்பாடுகள் காரணமாக விவசாய நிலங்களும் கடுமையான பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்படும் எனவும் பொது ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாளுக்கு நாள் டாஸ்மாக் கடை மற்றும் பார்களை சுற்றிலும், குடிமகன்களின் இந்த செயல்பாடுகள் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், இதனை யாரும் கண்டு கொள்வதேயில்லை எனவும் கூறப்படுகிறது.நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு, கால்நடைகள் பாதிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படும் என்பதால் இதுபோன்ற நிகழ்வுகளை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளைநிலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவை குடிமகன்களால் பாதிக்கப்படுவதை கண்டறிந்து அதனை தடுத்து நிறுத்தி, விவசாய நிலங்கள், விவசாயத்துக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்ற நோக்கில் அனைத்து தரப்பினர்களும் இந்த விசயத்தில் தலையிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி