கருங்குழி ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் கார்த்திகை மாத பவுர்ணமி சிறப்பு பூஜை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா பிருந்தாவனத்தில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் கார்த்திகை மாதம் பவுர்ணமியை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தம சுவாமிகள் பக்தர்களை சந்திக்கும் 115வது பவுர்ணமி தரிசனம் நடைபெற்றது.

சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள், ‘’ஓம் நமச்சிவாய மந்திர உச்சாடனையுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசியை பெற்றனர்.இதையடுத்து மக்கள் ஆரோக்கியமாக வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜையும் செய்து மகாதீப ஆராதனையை பக்தர்களுக்கு பக்தர்களுக்கு காண்பித்தார்.விழாவில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சித்தரிடம் ஆசி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தம சுவாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் செய்திருந்தனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா