கருணாகரச்சேரியில் ₹24 லட்சம் மதிப்பீட்டில் கர்ப்பகால பரிசோதனை, தடுப்பூசி மையம்: சா.மு.நாசர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருவள்ளூர்: பூந்தமல்லி கருணாகரச்சேரியில் ₹24 லட்சம் மதிப்பீட்டில் கர்ப்பகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையத்தை சா.மு.நாசர் எம்எல்ஏ திறந்துவைத்தார். ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி ஒன்றியம் கருணாகரச்சேரி ஊராட்சியில், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கர்ப்பகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குநர் எம்.செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் டி.தேசிங்கு, ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் கே.சுரேஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி கைலாசம், துணை தலைவர் கோமலா மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ கலந்துகொண்டு கர்ப்பகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (பூந்தமல்லி) பாஸ்கரன், மதிமுக மாவட்ட செயலாளர் பூவை மு.பாபு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடுகுத்தகை ஜெ.ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் ம.ராஜி, எஸ்.ஜெயபாலன், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் ப.ச.கமலேஷ், தி.வை.இரவி, ஜி.நாராயணபிரசாத், ஒன்றிய நிர்வாகிகள் இ.கந்தபாபு, கட்டதொட்டி எம்.குணசேகரன், பா.கந்தன், ஜி.சி.சி.கருணாநிதி, ஆர்.செந்தாமரை, இ.வி.பி.பிரதீப், சுரேஷ், மா.செ.ராஜேஷ், மாவட்ட மலேரியா அலுவலர் முருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிர மணியம், ஆய்வாளர்கள் வடிவேலு, ராஜபாண்டியன், சோமசுந்தரம், ஒப்பந்ததாரர் வி.எஸ்.துரைவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கபாலி குமரேசன் பாபு, கர்ப்பகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு