கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்தின் மீது ஏர்டெல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா உள்ளிட்ட 4 மோசடி மற்றும் ஊழல் வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், டென்னிஸ் போட்டிகளில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க லண்டன் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி நம்ரிதா அகர்வால், நேற்று வழங்கிய உத்தரவில், கார்த்தி சிதம்பரம் ரூ.1 கோடிக்கு செக்யூரிட்டி டெபாசிட் செலுத்த வேண்டும், வெளிநாடுகளில் எந்த வங்கிக் கணக்கையும் திறக்கவோ, மூடவோ, வெளிநாடுகளில் சொத்துப் பரிவர்த்தனைகளில் ஈடுபடவோ கூடாது என பல்வேறு நிபந்தனைகளுடன் வரும் 25ம் தேதி முதல் ஜூலை 17 வரை வெளிநாடு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கினார்.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!