கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் உயிரி தொழிற்நுட்பத்துறை கருத்தரங்கம்

மதுராந்தகம்: மதுராந்தகம் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சின்ன கொளம்பாக்கத்தில் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரியில் உயிரி தொழிற்நுட்பத்துறை சார்பாக 2 நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். முதல்வர் காசிநாத பாண்டியன், புலமுதல்வர்கள் சிவக்குமார் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் முனைவர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த கருத்தரங்கில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர்கள் நாகராஜ், ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்