கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11,720 கனஅடியாக அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11,720 கனஅடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் உபரிநீர் திறப்பு நேற்று 11,574 கனஅடியாக இருந்த நிலையில் உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,720 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11 ஆயிரத்து 720 கன அடியாக அதிகரித்து உள்ளது கிருணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து நேற்று 11 ஆயிரத்து 574 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், இன்று அதிகரிக்கப்பட்டு உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,720 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபிரி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1000 கன அடியாக உள்ளது.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனை..!!

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்