பெங்களூரு: பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி 120 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கட்சியான பாஜக 73 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.