கர்நாடக கோயில்களில் நந்தினி நெய் – அறநிலையத்துறை உத்தரவு

பெங்களூரு: கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு நந்தினி நெய்யை பயன்படுத்த வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் கர்நாடக அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள கோயில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்கு, அரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு சார்பாக நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு பிறகு பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு

அனுமதியின்றி தார்க்கலவை ஏற்றி சென்ற டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு

பர்கூர் மலைப்பாதையில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர்