பெங்களூரு: கர்நாடகத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. எஸ்.டி. சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என அக்கட்சி கூறி வந்தது. இந்நிலையில் எஸ்.டி.சோமசேகர் காங்கிரசுக்கு வாக்களித்ததை பாஜக தலைமை கொறடாவான தோடண்ண கவுடா உறுதிப்படுத்தினார். கட்சி மாறி வாக்களித்த சோமசேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக கொறடா அறிவித்துள்ளார்.