கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பெங்களூரு: கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் 10 மாவட்டத்தில் உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தின் கடலோரப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக உடுப்பி, குடகு, தார்வாட் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெருமழை பெய்துவருவதன் காரணமாக பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

பெலகாவி, யாத்கிர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

லாரி மீது மினி டெம்போ மோதி 2 பேர் பலி..!!

பிஎஸ்பி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை கோரிக்கை

ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்